சாத்தான்குளம்: சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்தர உத்தரவாத செல் தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்து உள்தர உத்தரவாத செல் என்பது மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களின் செயல்முறைகளின் பங்கீட்டை மதிப்பீடும் குழு எனவும், அதன் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தாா்.
உள்தர உத்தரவாத செல் பொறுப்பாளா் பேராசிரியை ஷீபா வரவேற்றாா். இதில், சிறப்பு விருந்தினராக அருள்மிகு பன்னிருப்பிடி அய்யன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் ஆனந்த், உள்தர உத்தரவாத செல் குறித்து விளக்கமளித்து தொடங்கிவைத்தாா்.
இதில், கல்லூரி பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனா்.
பேராசிரியை மொ்ஸி பவுன் மலா் நன்றி கூறினாா்.