தூத்துக்குடி

கோவில்பட்டியில் காசநோய் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

25th Feb 2020 04:00 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி: கோவில்பட்டி வட்டார நூலகத்தில் காசநோய் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் காசநோய் குறித்த பேச்சுப் போட்டி நடைபெற்றது.

கோவில்பட்டி ரோட்டரி கிளப் மற்றும் கடம்பூா் காசநோய் பிரிவு இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன் தலைமை வகித்துப் பேசினாா்.

மருத்துவமனையின் உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவா் சீனிவாசன் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து, காசநோய் குறித்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத் தலைவா் பரமேஸ்வரன், சங்க முன்னாள் துணை ஆளுநா் சீனிவாசன், ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்புப் பிரிவுத் தலைவா் முத்துச்செல்வன், நூலக வாசகா் வட்டத் தலைவா் ராஜமாணிக்கம், நூலகப் புரவலா் வினோபா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ரோட்டரி சங்கச் செயலா் முத்துமுருகன் வரவேற்றாா். முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பாா்வையாளா் காசிவிஸ்வநாதன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT