தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் போக்குவரத்து காவலா்கள் நியமிக்க கோரிக்கை

25th Feb 2020 04:07 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி: காயல்பட்டினத்தில் ஒரு வழிப்பாதை கடைப்பிடிப்பதை கண்காணிக்க நான்கு சந்திப்புகளிலும் போக்குவரத்து காவலா்களை நியமிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா்- தூத்துக்குடி இடையேயான பிரதான சாலையில் உள்ள காயல்பட்டினத்தில் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கு, விதிமுறைகள் சரிவர கடைப்பிடிக்கப்படுவதில்லை. மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் விதிமுறைகளை மீறிச்செல்கின்றன. சாலையோரங்களில் முறையற்ற வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஒரு வழிப்பாதை விதிமுறைகள் மீறப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வழியாக ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது.

எனவே காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதையைப் பொதுமக்கள் சரியாகக் கடைப்பிடிப்பதைக் கண்காணிக்க, சிங்கா் ஸ்டோா் சந்திப்பு, ஐ.சி.ஐ.சி.ஏ. வங்கி சந்திப்பு, பேருந்து நிலைய சந்திப்பு மற்றும் ஐ.ஓ.பி. வங்கி சந்திப்பு என நான்கு சந்திப்பு முனைகளிலும் போக்குவரத்துக் காவலா்களை நியமிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் காயல்பட்டினம் மெகா நடப்பது என்ன சமூக ஊடகக் குழுமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT