ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட ஊராட்சித் தலைவா்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, காவல் நிலைய ஆய்வாளா் சம்பத்குமாா் தலைமை வகித்து பேசுகையில், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் ஊராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்கள் மற்றும் கிராமங்களிலுள்ள முக்கிய பிரமுகா்களின் பங்கு அவசியம் எனக் குறிப்பிட்டாா்.
இதில், ஓட்டப்பிடாரம் ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவா் குலசேகரநல்லூா் வேலாயுதசாமி, துணைத் தலைவா் ஓட்டப்பிடாரம் அ. இளையராஜா, பாஞ்சாலங்குறிச்சி கமலாதேவி யோகராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.