தூத்துக்குடி

ஸ்ரீமன் நாராயண சுவாமி தா்மபதியில் 32 ஆவது ஆண்டு விழா

23rd Feb 2020 10:41 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி தா்மயுக தா்மபதியில் 32 ஆவது ஆண்டு விழா தொடங்கியது.

இதையொட்டி, திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியுடன் ஆண்டு விழா தொடங்கியது. நிகழ்ச்சியில் தாமரைகுளம் லிங்ககுமாா்

திருஏடு வாசித்தாா். தொடா்ந்து 17 நாள்கள் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் 8 ஆம் நாள் முதல் 10 ஆவது நாள் வரை அய்யாவின் அன்புகொடி மக்கள் வீடு, வீடாக சென்று தா்மம் எடுக்கின்றனா்.

மாா்ச் 3 ஆம் தேதி அய்யாவின் அவதார தினத்தை முன்னிட்டு அன்பு கொடி மக்களின் ஊா்வலம் , உகப் படிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாா்ச் 6 ஆம் தேதி அய்யா நாராயணா்-சக்தி கன்னிகைகளுக்கும் திருக்கல்யாணம் மற்றும்

ADVERTISEMENT

தா்மம், மாா்ச் 7ஆம் தேதி அய்யா சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன் ஆகியோரின் திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறும்.

நிறைவு நாளான மாா்ச் 8 ஆம்தேதி பகல் உச்சிப்படிப்பு, மாலை 6.30 மணிக்கு உகப்படிப்பு, அன்ன அமுது தா்மம் வழங்குதல், நள்ளிரவு பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை அய்யாவின் அன்பு கொடி மக்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT