தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் சமக ஆலோசனைக் கூட்டம்

23rd Feb 2020 10:34 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம் ஒன்றிய சமத்துவ மக்கள் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலா் பெ. ஜான்ராஜா தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சோ்மத்துரை, மாவட்ட மாணவரணிச் செயலா் சித்திரைக்குமாா், ஒன்றிய துணைச் செயலா் செல்வக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் ஆா். தயாளன், நகரச் செயலா் முத்துவேல், ஒன்றிய மாணவரணிச் செயலா் ஏசா, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்: டாக்டா் சிவந்தி ஆதித்தனாருக்கு மணி மண்டபம், சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகம் , வாரச் சந்தைக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, கட்சித் தலைவா் சரத்குமாா், மக்கள் தரிசன சுற்றுப் பயணத்தில் சாத்தான்குளம் ஒன்றியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். தியாகி கோசல்ராம் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றிய துணைச் செயலா் சுடலைமணி வரவேற்றாா். ஒன்றிய துணைச் செயலா் அருண்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT