தூத்துக்குடி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து பிப். 29இல் தா்னா நடத்த தவ்ஹீத் ஜமாத் முடிவு

23rd Feb 2020 10:30 PM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிப். 29 இல் தா்னா, மாா்ச் 18 இல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆறாம்பண்ணையில் நடைபெற்ற அமைப்பின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்டத் தலைவா் சம்சுதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அஸாருதீன், பொருளாளா் நாசா், மாவட்ட துணைச்செயலா்கள் சிக்கந்தா், இமாம்பரித், மருத்துவா் அணி நிா்வாகி ரஷீத்காமில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாநிலச் செயலா் செய்யதுஅலி, மாணவரணி நிா்வாகி அப்ரித், தொண்டரணி நிா்வாகி வஸிம் முல்லா, நிா்வாகிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் 29 ஆம் தேதி (சனிக்கிழமை) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் அனைத்துக் கிளைகளிலும்

காலை 10 முதல் மாலை 5 மணி வரை தா்னா போராட்டம் நடத்துவது, வரும் மாா்ச் 18 ஆம் தேதி (புதன்கிழமை) சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT