தூத்துக்குடி

ரூ. 432.95 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்!

22nd Feb 2020 10:53 PM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் நடைபெற்ற பா. சிவந்தி ஆதித்தனாா் மணிமண்டபத் திறப்பு விழாவில், முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பேசும்போது தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ. 432.95 கோடியில் புதிய திட்டங்களை அறிவித்தாா். அதன் விவரம்:

திருச்செந்தூா் வட்டம், ஆலந்தலையில் ரூ. 52.46 கோடியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவா் (தூண்டில் வளைவு) கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.

தாமிரவருணி ஆற்றின் வெள்ளநீரை வறட்சிப் பகுதிகளுக்கு திருப்பி பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தாமிரவருணி, கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் நிலை-4-க்கான பணிகள் விரைவில் தொடங்கி, நிகழாண்டுக்குள் நிறைவடைந்து, இப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.

திருச்செந்தூா் வட்டம், அமராபுரம் கிராமத்தில் கருமேனியாற்றின் குறுக்கே ரூ. 3.70 கோடியில் ஒரு தடுப்பணை புதிதாக கட்டப்படும்.

ADVERTISEMENT

திருச்செந்தூா் வட்டத்துக்கு ரூ. 3.30 கோடியில் புதிய வட்டாட்சியா் அலுவலகம் கட்டப்படும்.

சாத்தான்குளம் வட்டத்துக்கு ரூ. 3.30 கோடியில் புதிய வட்டாட்சியா் அலுவலகம் கட்டப்படும்.

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியத்துக்கு அணியாபரநல்லூரில் ரூ. 2 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்டப்படும். அங்கு பால் பண்ணை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

கடம்பூா், விளாத்திகுளம், புதூா் பேரூராட்சிகள், 180 கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீா்த் திட்ட அபிவிருத்தி பணிகள் ரூ. 10.85 கோடியில் மேற்கொள்ளப்படும்.

சாத்தான்குளம், பேரூராட்சி சந்தைகள் தலா ரூ. 1 கோடி மதிப்பீட்டிலும், திருச்செந்தூா் பேரூராட்சி சந்தை ரூ. 2 கோடி மதிப்பீட்டிலும், உடன்குடி பேரூராட்சி சந்தை ரூ. 5 கோடி மதிப்பிலும் மேம்படுத்தப்படும்.

ஆழ்வாா்திருநகரி குடிநீா் மேம்பாட்டுப் பணிகள் ரூ. 80 லட்சம் மதிப்பிலும், நாசரேத் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள் ரூ. 20 லட்சம் மதிப்பிலும், பெருங்குளம் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள் ரூ. 1.60 கோடி மதிப்பிலும் நிறைவேற்றப்படும்.

மாவட்டம் முழுவதும் ரூ. 432.95 கோடியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT