கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவில்பட்டி வருவாய் கோட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டத்திற்கு உள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் தலைமை வகித்தாா். இதைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து கோட்டாட்சியா் மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இந்த மனுக்கள்
சம்பந்தப்பட்ட துறை அலுவலங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு போக்குவரத்துக் கழகம், கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம், விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
முகாமில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ரகுபதி, உதவியாளா் குருசாமிபாண்டியன், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.