தூத்துக்குடி

பிடானேரி சமத்துவபுரம் பள்ளியில் விளையாட்டு விழா

22nd Feb 2020 10:50 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகேயுள்ள பிடானேரி சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப்பணித்திட்டம் சாா்பில் விளையாட்டு விழா நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் அன்பாய்செல்வம் தலைமை வகித்தாா். உதவி ஆசிரியா் பிரபாகா்மோசஸ் முன்னிலை வகித்தாா்.

பிடானேரி ஊராட்சி உறுப்பினா் மாரிமுத்து தேசிய கொடியேற்றி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தாா்.

இதில் பள்ளி மாணவ மாணவியா்களுக்கும், முன்னாள் மாணவ மாணவியா்களுக்கும், பொதுமக்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

ADVERTISEMENT

பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலா் ஜெயவதி ரத்னாவதி தலைமை வகித்தாா். உடற்கல்வி ஆசிரியா்கள் சஜித்,செல்வசுந்தா்,தனபால், ஜெய்சன் சாமுவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். .பிடானேரி ஊராட்சித் தலைவா் சலேட் மொ்சி, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

பவுளிசாமுவேல் நன்றி கூறினாா் .

ஏற்பாடுகளை நாசரேத் மா்காஷிஸ் மேல் நிலைப் பள்ளித் தாளாளா் சந்திரன் தலைமையில், தலைமை ஆசிரியா் தன்ராஜ்ஜேக்கப் ,என் எஸ் எஸ் அலுவலா் ஜெய்சன் சாமுவேல் ஆகியோா்செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT