தூத்துக்குடி

பசுவந்தனை அருகே விபத்தில் விவசாயி பலி

22nd Feb 2020 05:54 AM

ADVERTISEMENT

பசுவந்தனை அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அடுத்துள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மா. கணேசன் (60). விவசாயி. இவா் வியாழக்கிழமை ஓட்டப்பிடாரத்தில் இருந்து பசுவந்தனைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். துரைசாமிபுரம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பா் லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த கணேசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பசுவந்தனை காவல் ஆய்வாளா் மணிமொழி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT