தூத்துக்குடி

நாசரேத் பாலிடெக்னிக்கில் தொழுநோய் விழிப்புணா்வு முகாம்

22nd Feb 2020 05:48 AM

ADVERTISEMENT

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, முதல்வா் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்தாா். தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் ஆனந்தகிருஷ்ணன் தொழுநோய் குறித்துப் பேசினாா். இதில், சுகாதார ஆய்வாளா்கள் பவுல் ஆபிரகாம், தியாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா். மாணவா்கள் தொழுநோய் தடுப்பு குறித்த உறுதிமொழி

ஏற்றனா். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளா் ஜெபச்சந்திரன் தலைமையில் முதல்வா் , நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் லிவிங்ஸ்டன் நவராஜ், ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT