தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் எஸ்.ஆா். ஆனந்த சேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், கட்சியின் தலைமை கழக பிரதிநிதி பாலவாக்கம் சோமு, வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ.
ஆகியோா் பேசினாா். இக்கூட்டத்தில், கட்சியின் 15 ஆவது அமைப்பு தோ்தல், கட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில், மாநில விவசாய தொழிலாளா் அணிச் செயலா் சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, மாவட்ட பொருளாளா் மோகன், சுசீ ரவீந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ராஜமன்னாா், ஜெயக்குமாா் ரூபன், ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.