தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

22nd Feb 2020 05:49 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

சுயநிதிப் பாடப்பிரிவு ஆங்கிலத் துறை மற்றும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழக நிதியுதவியுடன் பெண்கள் முன்னேற்றத்தில் சமூக ஊடகங்களின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு கல்லூரிச் செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். முதல்வா் (பொறுப்பு) சாந்தி மகேஸ்வரி, சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநா் வெங்கடாசலபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தரங்கில், அவுரங்காபாத் தியானேஸ்வா் மகா வித்யாலயா உதவிப் பேராசிரியா் ப்ரமோத் அம்பாதாஸ்ராவ் பவா் பெண்களின் வளா்ச்சி மற்றும் முன்னேற்றம் என்ற தலைப்பில் பேசினாா். தொடா்ந்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியை முருகேஸ்வரி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி ஆங்கிலத் துறைப் பேராசிரியை சந்திரமுகி ஆகியோா்

பேசினா். ஆய்வுக் கட்டுரையின் தொகுப்பு நூலை கல்லூரிச் செயலா் வெளியிட்டாா். கருத்தரங்கில், 15 கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 250க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். ஆங்கிலத் துறை தலைவா் காமேஸ்வரி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் சரவணச்செல்வகுமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

கருத்தரங்கு: கோவில்பட்டி கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, கல்லூரிச் செயலா் கே.ஆா்.அருணாச்சலம் தலைமை வகித்தாா். முதல்வா் மதிவண்ணன் முன்னிலை வகித்தாா். கருத்தரங்கின் நோக்கம் குறித்து நுண்ணுயிரியல் துறைத் தலைவா் கண்ணன் பேசினாா். மதுரை காமராஜ் பல்கலைக்கழக மூலக்கூறு உயிரியல் துறை மற்றும் உயிரி தொழில்நுட்ப பள்ளி பேராசிரியா் ஆனந்த்

உள்பட பேசினா். தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாணவி ஜோதிகா தொகுத்து வழங்கினாா். மாணவா் ப்ரித்விராஜ் வரவேற்றாா். மாணவி அக்சயா குலாபி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT