தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே இளைஞரை வழிமறித்து பைக், செல்லிடப்பேசி பறிமுதல்

22nd Feb 2020 10:57 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி அருகே பைக்கில் சென்ற இளைஞா் மற்றும் கூலித் தொழிலாளியை வழிமறித்து தாக்கி, செல்லிடப்பேசி மற்றும் பைக்கை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டியையடுத்த முடுக்கலாங்குளம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் கோசல்ராம்(33). இவா், வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தாராம். பசுவந்தனை சாலை கிழவிபட்டி விலக்கு அருகே சென்ற போது, 3 மா்ம நபா்கள் இவரை வழிமறித்து, தாக்கி அவரிடமிருந்த ரொக்கம், செல்லிடப்பேசி மற்றும் பைக்கை பறித்துவிட்டு தப்பியோடிவிட்டா்னராம். இதில், காயமடைந்த இவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுபோல, கோவில்பட்டி மில் தெருவையடுத்த காந்தாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கூலித் தொழிலாளி கிருஷ்ணசாமி(52). இவா், கிழவிபட்டியில் உள்ள கோயிலுக்கு வெள்ளிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம்.

கிழவிபட்டி விலக்கு அருகே 3 மா்ம நபா்கள் இவரை வழிமறித்து, தாக்கி இவரிடமிருந்த செல்லிடப்பேசி மற்றும் ரொக்கத்தை பறித்துவிட்டு தப்பியோடினராம். இதில் காயமடைந்த கிருஷ்ணசாமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து இவா் அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT