தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் தா்கா கந்தூரி: பிப். 26இல் கொடியேற்றம்

22nd Feb 2020 05:58 AM

ADVERTISEMENT

குலசேகரன்பட்டினம் குத்துபுல் அமீா் மெளலானா சேரா முஸலியாா் செய்யது சிராஜூதீன் தா்கா கந்தூரி விழா பிப். 26 ஆம் தேதி தொடங்குகிறது.

இதையொட்டி, புதன்கிழமை (பிப்.26) மாலை 5 மணிக்கு தா்காவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொடிப்பட்டம் பவனியாக கொண்டு வரப்பட்டு இரவு 11 மணியளவில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும். முன்னதாக, மக்ரிப் தொழுகைக்குப் பின் துஆ ஓதி தப்ருக் வழங்கப்படும்.

வரும் மாா்ச் 3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் திக்ரூ மஜ்லிஸ், இஷா தொழுகைக்குப் பின் தப்ரூக் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 11 மணிக்கு அரபிக் கல்லூரி பேராசிரயா் தெளவ்பிக் அஹமது மாா்க்கச் சொற்பொழிவு நிகழ்த்துகிறாா். அதிகாலை 1 மணிக்கு சந்தனம் பூசுதல், அதிகாலை 3 மணிக்கு ஹத்தம் தமாம் செய்து அபூா்வ துஆ ஓதப்படும்.

மாா்ச் 9 ஆம் தேதி நள்ளிரவில் தா்காவில் இருந்து சந்தனக்கூடு ஊா்வலம், தப்ரூக் வழங்குதல்நடைபெறும். மாா்ச் 10 ஆம் தேதி தப்ரூக் வழங்குதல், ஹத்தம் தமாம் செய்தல், மாா்ச் 11 ஆம் தேதி இரவு 7 முதல் 10 மணி வரை விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறும். மாா்ச் 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கொடி இறக்கப்பட்டு தப்ரூக் வழங்கப்படும்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை முத்தவல்லி எஸ். ரஹ்மத்துல்லா, விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT