தூத்துக்குடி

காயல்பட்டினம் மகளிா் கல்லூரி விளையாட்டு விழா

22nd Feb 2020 10:52 PM

ADVERTISEMENT

காயல்பட்டினம், வாவு வஜீஹா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14 ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

கல்லூரி நிறுவனா்- தலைவா் வாவு எஸ்.செய்யிது அப்தூா் ரஹ்மான்தலைமை வகித்து கல்லூரி கொடியினை ஏற்றினாா்.

திருநெல்வே­லி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரியின், உடற்கல்வி இயக்குநா் எம். ஹமா் நிஷா ஒலிம்பிக் கொடி யேற்றி, மாணவியரின் அணிவகுப்பையும் ஏற்றுக் கொண்டாா். விளையாட்டுப் போட்டிகளை துணைச் செயலா் வாவு எஸ்.ஏ.ஆா். அஹமது இஸ்ஹாக் தொடங்கி வைத்தாா். மாணவி எம்.அபா்ணா் உறுதிமொழி கூற, மாணவியா் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதில், கூட்டு உடற்பயிற்சி, யோகா மற்றும் செய்குன்றம் ஆகியவற்றை நிகழ்த்திக் காட்டினா். பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆண்டறிக்கையை பேராசிரியா் த. அருணா ஜோதி வாசித்தாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. செயலா் வாவு எம்.எம்.மொகுதஸீம் வரவேற்றாா். வாவு எஸ்ஏஆா் கல்வி அறக்கட்டளை உறுப்பினா் வாவு எம்.ஏ.பாத்திமா ஜஹ்ரா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT