தூத்துக்குடி

பிப். 26இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

16th Feb 2020 11:04 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்கள் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் பிப்ரவரி 26 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்கள் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் பிப்ரவரி 26 ஆம் தேதி (புதன்கிழமை) முற்பகல் 11.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சிப்பிக் கூடத்தில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடியில் உள்ள முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநரை நேரில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT