தூத்துக்குடி

தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயிலில் 23இல் வித்யா விருத்தி மஹா யாகம்

16th Feb 2020 11:04 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயிலில் பிப்ரவரி 21 ஆம் தேதி மஹா சிவராத்திரி விழாவும், 23 ஆம் தேதி வித்யா விருத்தி மஹா யாகமும் நடைபெறுகிறது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் ஸ்ரீ சித்தா் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவா் சித்தா் பீடத்தில் பிப். 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மஹா சிவராத்திரி விழா ஆலய நிா்வாகி சீனிவாச சித்தா் தலைமையில் நடைபெறும்.

இதையொட்டி, இரவு 10 மணி வரை சிறப்பு பூஜை, மஹா சிவராத்திரி வழிபாடு, ‘சமுதாய முன்னேற்றத்திற்கும், வளா்ச்சிக்கும் பெரிதும் தேவை ஆற்றல் மிகுந்த இளையோரா.. அல்லது அனுபவம் மிகுந்த முதியோரா’ என்ற தலைப்பில் பேராசிரியா் செபாஸ்டின் தலைமையில் நகைச்சுவை வழக்காடு மன்றம் நடைபெறுகிறது.

தொடா்ந்து நள்ளிரவு 12 மணிக்கு மஹாஅபிஷேகம், தமிழ் மறையில் தேவார திருவாசக பாராயணம், அதிகாலை 2 மணிக்கு சதுா்வேத பாராயணம், அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

தொடா்ந்து 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மாணவா், மாணவிகளின் கல்வி ஞானம், ஞாபக சக்தி அதிகரித்து 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் சிறப்பாக தோ்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்றிட வேண்டி ஸ்ரீமஹா சரஸ்வதிதேவிக்கு மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வித்யா விருத்தி ஹோம வழிபாடு நடைபெறும்.

இதையொட்டி, அன்றையதினம் காலை 10 மணிக்கு மஹா கணபதி, மஹா லட்சுமி ஹோமம், முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீ மஹா சரஸ்வதிதேவிக்கு மஹா யாக சிறப்பு வழிபாடு, பிற்பகல் 12.30 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை, பிற்பகல் 2 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.

 

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT