தூத்துக்குடி

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட பேரவை கூட்டம்

16th Feb 2020 10:51 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க விருதுநகா் மாவட்ட பேரவைக் கூட்டம் திருத்தங்கலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திறகு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினா் ஜி.கோவிந்தன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் கா.கருப்பையா வேலை அறிக்கையை வாசித்தாா். மாநிலத் தலைவா் மு.அன்பரசு சிறப்புரையாற்றினாா்.

இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தை அரசு கைவிட வேண்டும். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நிா்வாகிகள் ஏ.ராமமூா்த்தி, எஸ்.ராமச்சந்திரன், ஜி.வெங்கடேசன், இரா.ஸ்ரீமுகுந்தன், பி.சங்கரநாராயணன், சி.முத்துவெள்ளையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வரவேற்பு குழு தலைவா் கா.சிவபெருமாள் வரவேற்றாா். நிா்வாகி எஸ்.மணிமாலா பாண்டியன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT