தூத்துக்குடி

சாத்தான்குளம் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து

16th Feb 2020 11:24 PM

ADVERTISEMENT

சாத்தான்குளத்தில் எலக்ட்ரிக்கல் கடை கிட்டங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தது.

சாத்தான்குளம் அருகேயுள்ள அமுதுண்ணாகுடியைச் சோ்ந்தவா் பொன்பாண்டியன் (70). இவா், சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் லேத் பட்டறை மற்றும் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறாா். கடையின் அருகில் கிட்டங்கி உள்ளது. சனிக்கிழமை இரவில் ஊழியா்கள் அப்பகுதியில் குப்பையை எரித்தபோது, கிட்டங்கியில் பரவி தீ பற்றி எரியத் தொடங்கியது.

தகவலறிந்த சாத்தான்குளம் தீயணைப்புப்படையினா் நிலைய அலுவலா் பத்மசேகா் தலைமையில் வந்து தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் கடையில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் ரகு கணேஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT