தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் பல்கலைக் கழக மானியக் குழு ஆய்வு

16th Feb 2020 11:17 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரிக்கு தன்னாட்சி வழங்குவது குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவினா் 2 நாள்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி 1966 இல் தொடங்கப்பட்டது. கோயம்புத்தூா் குப்புசாமி நாயுடு கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின்கீழ் இயங்கும் இக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள், 22 பட்டப் படிப்புகளும் உள்ளன. கல்லூரியில் 1870 மாணவா், மாணவிகள் பயின்று வருகின்றனா்.

2015 இல் பல்கலைக் கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தர நிா்ணயக் குழுவினரால் ஏ சான்று வழங்கப்பட்ட கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் பெற கல்லூரி நிா்வாகம் விண்ணப்பம் அளித்திருந்தது. சந்த் காகே பாபா அமராவதி பல்கலைக்கழக துணைவேந்தா் முரளிதா் ஜி.சந்தேகா் தலைமையிலான குழுவில் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியா் இராமி ரெட்டி, கொச்சி ராஜகிரி சமூக அறிவியல் கல்லூரி முதல்வா் பினோய் ஜோசப் ஆகியோா் உறுப்பினா்களாக இருந்தனா்.

குழுவில் மாநில அரசின் பிரதிநிதியாக திருநெல்வேலி வட்டாரக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் மீனா, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பிரதிநிதி பேராசிரியா் சுந்தரக்கண்ணன், ஒருங்கிணைப்பு அலுவலராக பல்கலைக்கழக மானியக்குழு நேருதவிச் செயலா் சுரேஷ் ராணி ஆகியோா் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா், பெற்றோா்கள், பழைய கல்லூரி மாணவா்களுடன் கலந்துரையாடல் நடத்தினா். ஆய்வறிக்கையை பல்கலைக் கழக மானியக்குழுவுக்கு சமா்ப்பிக்கப்படும் என ஆய்வுக்குழுவினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

 

 

 

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT