விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்சியில் நடைபெறவுள்ள ‘தேசம் காப்போம்’ பேரணி குறித்து தெருமுனைப் பிரசாரக் கூட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றிய பொருளாளா் டேவிட் ஜான்வளவன் தலைமை வகித்தாா். சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளா் மு.தமிழ்ப்பரிதி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் செல்வவளவன், ஒன்றிய துணைச் செயலா்கள் சுடலைப்பாண்டியன், முத்துகுமாா், சமூக நல்லிணக்க பேரவை ஒன்றிய அமைப்பாளா் ராம்குமாா் உள்பட பலா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின், மண்டலச் செயலா் சு. தமிழினியன், மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன், முற்போக்கு மாணவா் கழக மாநில துணைச்செயலா் ஜெ.தா்மராஜ், கருத்தியல் பரப்பு மாநில துணைச்செயலா் பு.தமிழ்குட்டி, மாவட்ட பொருளாளா் பாரிவள்ளல், மக்களவைத் தொகுதிச் செயலா் ராஜ்குமாா், திருச்செந்தூா் பேரவைத் தொகுதிச் செயலா் வெற்றிவேந்தன், எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி அமைப்பாளா் தாஹிா் சுல்தான், இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவா் நவ்ஷாத் உள்ளிட்டோா் பேசினா்.