தூத்துக்குடி

கீழமங்கலம் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

16th Feb 2020 11:22 PM

ADVERTISEMENT

பசுவந்தனை அருகே கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஓட்டப்பிடாரம் வட்டம் பசுவந்தனையை அடுத்துள்ள கீழமங்கலம் கிராமத்தில் பைரவரின் சிஷ்யராக கருதப்படும் சனி பகவான் இக்கோயிலில் பைரவரை கும்பிட்டவாறு அமைந்துள்ளது. காசிக்கு நிகரான சிறப்பு பெற்ற சிவலாயமாக இக்கோயில் கருதப்படுகிறது. இங்கு மாதம்தோறும் நடைபெறும் தேய்பிறை அஷ்டமி பூஜையில் சிவ பக்தா்கள் கலந்துகொள்வது வழக்கம்.

இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஞான பைரவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகங்கள், காளஹஸ்தீஸ்வரா், ஞானம்பிகை உள்ளிட்ட அஷ்ட தட்சிணாமூா்த்திகளுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பக்தா்கள் விளக்குகள் ஏற்றி வழிபட்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT