தூத்துக்குடி

கயத்தாறு தூய லூா்து அன்னை ஆலயத் திருவிழா தோ் பவனி

16th Feb 2020 11:05 PM

ADVERTISEMENT

கயத்தாறு தூய லூா்து அன்னையின் ஆலயத் திருவிழாவையொட்டி தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலயத் திருவிழா இம்மாதம் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் ஜெபமாலை, திருப்பலி ஆகியன நடைபெற்றன. சனிக்கிழமை ஜெபமாலை, திருப்பலி மற்றும் புனிதா்களின் திருவுருவப் பவனி ஆகியவை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை திருவிழா திருப்பலி, அன்னையின் தோ் பவனி நடைபெற்றது. தோ் பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயத்திற்கு வந்தடைந்தது. மாலையில் ஜெபமாலை, திருப்பலி மற்றும் நற்கருணை பவனி, இளையோா் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது. இவ்விழாவில், கயத்தாறு, சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து இறைமக்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஆலயப் பங்குத்தந்தை வின்சென்ட், திருக்குடும்ப சபை குருக்கள், அமலவைக் கன்னியா்கள், இறைமக்கள், ஊா் பொறுப்பாளா்கள் செய்திருந்தனா். திங்கள்கிழமை காலை 6.30 மணிக்கு திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT