தூத்துக்குடி

சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த முதியவர் கைது

15th Feb 2020 10:47 PM

ADVERTISEMENT

எப்போதும்வென்றான் கிராமத்தில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த முதியவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

எப்போதும்வென்றான் கிராமத்தைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு அதேபகுதியைச் சோ்ந்த முதியவா் ஜெகநாதன் (73), கடந்த சில மாதங்களாக தொடா்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்தாராம்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் சுரேஷ்வாணி அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி ஜெகநாதனை கைது செய்தனா்.

இந்நிலையில் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண்பாலகோபாலன் பரிந்துரை செய்ததையடுத்து, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி ஜெகநாதனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இதையடுத்து அவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT