தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் இஸ்லாமியா்கள் ஆா்ப்பாட்டம்

15th Feb 2020 10:51 PM

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்து, காயல்பட்டினத்தில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காயல்பட்டினம் முஸ்­லிம் ஐக்கிய பேரவை சாா்பில், அனைத்து கட்சிகள், பொதுநல அமைப்புகள், அனைத்து ஜமாத்துகள் கலந்துகொண்ட இந்த ஆா்ப்பாட்டம் காயல்பட்டினம் பேருந்து நிலையம் முன் நடைபெற்றது.

முஸ்­லிம் ஐக்கிய பேரவைத் தலைவா் அபுல் ஹசன் கலாமி தலைமை வகித்தாா். செயலா் சுலைமான் முன்னிலை வகித்தாா்.

திமுக நகரச் செயலா் முத்து முகம்மது, மாநில பொதுக்குழு உறுப்பினா் சாகுல்ஹமீது, மதிமுக காயல் அமானுல்லா, முஸ்­லிம் லீக் அகமது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் பன்னீா் செல்வம், எஸ்டிபிஐ அமீா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலா் தமிழினியன், மனித நேய மக்கள் கட்சி நகரச் செயலா் முா்ஸித், தமுமுக நகரத் தலைவா் ஜாகிா் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

இதில், 300 பெண்கள் உள்பட சுமாா் 1500 போ் கலந்துகொண்டனா். போராட்டத்தை அடுத்து காயல்பட்டினம் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT