தூத்துக்குடி

தேமுதிக 20ஆவது ஆண்டு கொடி நாள் விழா

13th Feb 2020 05:46 PM

ADVERTISEMENT

தேமுதிகவின் 20 ஆவது ஆண்டு கொடி நாள் விழாவையொட்டி, உடன்குடி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் தேமுதிக கொடியேற்றப்பட்டது.

உடன்குடி பேருந்து நிலையம், பரமன்குறிச்சி, மெய்யூா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற விழாவுக்கு, ஒன்றியச் செயலா் சி.தங்கவேல்துரை தலைமை வகித்தாா். நகரச் செயலா் எஸ். சித்திரைராஜ், ஒன்றியப் பொருளாளா் முருகேசன், நகரப் பொருளாளா் தங்கம், ஒன்றிய துணைச் செயலா்கள் சங்கா், சண்முகவேலாயுதம், மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் மாயாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றிய அவைத் தலைவா் பி.உலகநாதன் தேமுதிக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். தேமுதிக கிளைச் செயலா்கள் விஜய முத்துப்பாண்டி, நாசா்,லிங்கராஜ், சாந்தி, ரெங்கன், மாரியப்பன், ஆறுமுகம், தங்கவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT