தூத்துக்குடி

கடலோர மாவட்டங்களில் சாகர் கவாச்: தொடங்கியது பாதுகாப்பு ஒத்திகை

6th Feb 2020 12:16 PM

ADVERTISEMENT


தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் என்னும்' பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் வகையில், ஆபரேஷன் சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி வியாழன் காலை 5 மணிமுதல் வெள்ளி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கடற்படை, கடலோரக் காவல்படை, கடலோரப் பாதுகாப்புக்கு குழுமம் மட்டுமன்றி தமிழக காவல் துறையினர் கலந்துகொள்கின்றனர். பல்வேறு கடலோர மாவட்டங்களில் பயங்கரவாதிகளாக வேடமிட்டு வரும் கடற்படை, கடலோரக் காவல்படை கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்தவர்களை தமிழக காவல் துறையினர் கண்டுபிடிப்பது போல் ஒத்திகை நடைபெறும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒத்திகையில் தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த 12 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT