தூத்துக்குடி

தூத்துக்குடியில் விபத்து: தாய், மகன் சம்பவ இடத்திலேயே பலி

6th Feb 2020 01:44 PM

ADVERTISEMENT


தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பட்டியூரைச் சேர்ந்த காளியப்பன் (53), மனைவி மாலா (31), மகன் வெள்ளைச்சாமி ஆகியோர் தூத்துக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். சண்முகபுரம் கிராமத்திற்கு அருகே வந்து கொண்டிருந்தபோது அதே வழியில் விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 

இதில், பேருந்தின் பின்புற சக்கரம் மாலா மற்றும் வெள்ளைச்சாமி மீது ஏறியது. இதனால், தாய்-மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஓட்டப்பிடாரம் காவல் துறையினர் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த காளியப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக ஓட்டப்பிடாரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT