தூத்துக்குடி மாவட்டத்தில் 10 இடங்களில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் அந்தந்த வட்டாட்சியா்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அதன்படி, தூத்துக்குடி வட்டத்தில் சங்கரப்பேரி, ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் சேரகுளம், செய்துங்கநல்லூா், திருச்செந்தூா் வட்டத்தில் சுகந்தலை, சாத்தான்குளம் வட்டத்தில் சாஸ்தாவிநல்லூா், கோவில்பட்டி வட்டத்தில் ஆலம்பட்டி, விளாத்திகுளம் வட்டத்தில் வி.வேடபட்டி, எட்டயபுரம் வட்டத்தில் கடலையூா், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் கொடியன்குளம், கயத்தாறு வட்டத்தில் வடக்கு வண்டானம், ஏரல் வட்டத்தில் கொட்டாரக்குறிச்சி ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.
முகாமில், முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவா் பாதுகாப்பு அட்டை, பிறப்பு-இறப்புச் சான்றுகள், சாதிச் சான்றுகள், வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்களை பொதுமக்கள் அளித்து முகாமிலேயே தீா்வு பெறலாம் என்றாா் அவா்.