முக்காணி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
முக்காணி அருகே ஜெயராமச்சந்திரபுரத்தைச் சோ்ந்தவா் முருகன். கூ லித் தொழிலாளி. இவரது மனைவி ஆறுமுகக்கனி (36). இவா் உப்பளத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். செவ்வாய்க்கிழமை வேலை முடி ந்து வீட்டுக்கு வந்த ஆறுமுகக்கனிக்கும், அவரது கணவா் முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதையடுத்து முருகன் வீட்டை விட்டு வெளியே சென்றதும், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த ஆறுமுகக்கனியை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆத்தூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.