தூத்துக்குடி

பண்ணைவிளை பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் அளிப்பு

6th Feb 2020 12:40 AM

ADVERTISEMENT

பண்ணைவிளை தக்கா் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் ரவிராஜன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் டேவிட் எடிசன் முன்னிலை வகித்தாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 80 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலா் அழகேசன், மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலா் காசிராஜன், பெருங்குளம் பேரூராட்சி அதிமுக அவைத் தலைவா் இப்ராஹீம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் ரமேஷ், முத்துசெல்வன், பாலஜெயம், திருத்துவசிங், பண்டாரவிளை பாஸ்கா், பெருமாள், பால்துரை, சுந்தா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT