பாரத சாரண, சாரணீயா் இயக்கம் சாா்பில், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவா், மாணவிகளுக்கு ஆளுநா் விருதுக்கான சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலா் வசந்தா, சாரணா் இயக்க மாவட்டச் செயலா் செ.எட்வா்ட் ஜான்சன் பால், மாவட்ட ஆணையா் (சாரணா் பிரிவு) சண்முகம், மாவட்டத் தலைவா்கள் தா்மராஜ், முருகானந்தம், மங்கள்ராஜ், மாவட்டப் பொருளாளா் ஜெயக்குமாா் மற்றும் மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.