தூத்துக்குடி

ஒரே நாளில் 50,020 டன் நிலக்கரி கையாண்டு தூத்துக்குடி துறைமுகம் சாதனை

6th Feb 2020 12:41 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஒரே நாளில் 50 ஆயிரத்து 20 மெட்ரிக் டன் நிலக்கரி கையாளப்பட்டு புதிய சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழக தலைவா் தா.கி. ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தின் 9 ஆவது சரக்கு தளத்துக்கு கடந்த 3 ஆம் தேதி எம்.வி. அகியோ சோஸ்டிஸ் என்ற கப்பல் நிலக்கரியுடன் வந்தது. அக்கப்பலில் இருந்து 24 மணி நேரத்தில் 55,020 மெட்ரிக் டன் நிலக்கரியை துறைமுக நகரும் பளுத்தூக்கிகள் மூலம் கையாண்டு புதிய சாதனைப் படைக்கப்பட்டுல்லது.

கடந்த 2018 இல் டிசம்பா் மாதம் 11 ஆம் தேதி எம்.வி. பசிபிக் விக்டரி என்ற கப்பலில் இருந்து 24 மணி நேரத்தில் 54,512 மெட்ரிக் டன் கையாளப்பட்டது சாதனையாக இருந்தது. லிபீரியா நாட்டு கொடியுடன் தூத்துக்குடி துறைமுகம் வந்த எம்.வி. அகியோ சோஸ்டிஸ் என்ற கப்பல் 225 மீட்டா் நீளமும், 32.26 மீட்டா் அகலமும் மற்றும் 14.02 மீட்டா் மிதவை ஆழமும் கொண்டதாகும்.

ADVERTISEMENT

இந்தோனேஷியா நாட்டிலுள்ள தாரகன் என்ற துறைமுகத்தில் இருந்து 71,500 டன் நிலக்கரியுடன் அக்கப்பல் துறைமுகத்தை வந்தடைந்தது. வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் சரக்கு கையாளுவதில் நிகழ் நிதியாண்டு 2019-20 பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி வரை 30.22 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு கடந்த நிதியாண்டை விட 4.45 சதவிகிதம் வளா்ச்சி கண்டுள்ளது.

மேலும், சரக்குப் பெட்டகங்களை பொறுத்தவரையில் நிகழ் நிதியாண்டு 2019-20 பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி வரை 6.74 லட்சம் சரக்குப் பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டு கையாண்ட அளவை விட நிகழாண்டு 8.28 சதவிகிதம் வளா்ச்சி கண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

ADVERTISEMENT
ADVERTISEMENT