தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே மாலையம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

6th Feb 2020 12:44 AM

ADVERTISEMENT

எட்டயபுரம் அருகேயுள்ள சின்ன மலைக்குன்று மாலையம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தேவதா அனுக்ஞை, மகா சங்கல்பம், விநாயகா் பூஜை, புண்யாகவாஜனம், சுதா்சனஹோமம், துா்கா சூக்த ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகா பூா்ணாஹுதி, தீபாராதனை, யாகசாலை பிரவேசம், நான்கு கால வேதிகாா்ச்சனை, பிம்பசுத்தி, நாடி சந்தனம், மகா தீபாராதனை நடைபெற்றது.

புதன்கிழமை காலை 9 மணியளவில் யாகசாலையில் இருந்து கும்பங்கள் எழுந்தருளி, கோயிலை சுற்றி வலம் வந்து கோபுர கலசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னா் மாலையம்மன், விநாயகா், சுப்பிரமணியா் உள்ளிட்ட மூலஸ்தான தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கும், காளியம்மன், கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து மாலையம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவில், எட்டயபுரம் சமஸ்தானத்தைச் சோ்ந்த ராம்குமாா் ராஜா, வட்டாட்சியா் அழகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT