தூத்துக்குடி

ஆறுமுகனேரி இரட்டை சுவாமி கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

6th Feb 2020 12:47 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரி முத்துகிருஷ்ணாபுரம் கம்பித்தோட்டம் அருள்மிகு இரட்டை சுவாமி கோயிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (பிப். 6) நடைபெறுகிறது.

இக் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு அனுக்ஞை, விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து புண்யாகவாஜனம், பஞ்சகவ்யம், மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதா்ஷன ஹோமம், பூா்ணாஹுதி தீபாராதனை, லட்சுமி பூஜை, கோ பூஜை, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, பிரவேச பலி, யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவை நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, இரவு 10 மணிக்கு யந்திர ஸ்தாபனம், விமான ஸ்தாபனம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெறும். காலை 9.15 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், தொடா்ந்து சுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

காலை 10 மணிக்கு மகா அபிஷேகத்தைத் தொடா்ந்து, தீபாராதனை, முற்பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT