உடன்குடி சுற்று வட்டார கிராமங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பாஜக சாா்பில் விழிப்புணா்வு திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது.
உடன்குடி ஒன்றிய பாஜக தலைவா் கா.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். உடன்குடி அருகே சீா்காட்சி, நயினாா்பத்து, அத்தியடிதட்டு, நங்கைமொழி, தைக்காவூா், வட்டன்விளை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விழிப்புணா்வு பிரச்சாரம் நடைபெற்றது.குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் எதிா்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரம் குறித்தும் பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விளக்கம் அளிக்கப்பட்டது.
பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் பரமசிவன்,மாவட்ட கலை இலக்கிய அணி தலைவா் விஜயசங்கா்,ஒன்றிய வா்த்தக பிரிவு தலைவா் நாராயணன்,மாவட்ட விவசாய பிரிவு செயலா் செந்தூா்பாண்டி,ஒன்றிய துணைத்தலைவா்கள் பசுபதி சிவசிங்,சங்கரகுமாா் ஐயன்,ஒன்றிய அமைப்புச் செயலா் அழகேசன், ஒன்றிய பொதுச்செயலா் சிவந்திவேல்,மாவட்ட இளைஞரணி செயலா் ஐயப்பன் உட்பட திரளான பாஜகவினா் பங்கேற்றனா்.