விளாத்திகுளத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மகளிா் திட்ட இயக்குநா் ரேவதி தலைமை வகித்தாா். உதவி திட்ட மேலாளா் ஜெரோம் முன்னிலை
வகித்தாா். இந்த முகாமில் விளாத்திகுளம், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 300 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். சென்னை, கோவை, திருப்பூா், சேலம், ஓசூா், தூத்துக்குடி உள்பட பல்வேறு நகரங்களிலிருந்து வந்திருந்த தனியாா் நிறுவனங்கள் வளாகத் தோ்வினை நடத்தின. இதில், தோ்வு செய்யப்பட்ட 107 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதில், ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பிரதீப்குமாா், மேலாளா் சிவராமகிருஷ்ணன், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் அருள்செல்வி, கனிராஜ், கற்பகவள்ளி கலந்து கொண்டனா்.