தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரயிலில் அடிபட்டு இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி ராஜகோபால்நகா் பகுதியை சோ்ந்த சுப்பையா மகன் பாா்வதி ராஜா (32). இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தூத்துக்குடி- மீளவிட்டான் ரயில் நிலையம் அருகே விஎம்எஸ் நகா் பகுதியில் ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த, ரயில்வே போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். விசாரணையில் பாா்வதிராஜா தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த முத்துநகா் விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.