தூத்துக்குடி

தூத்துக்குடியில் கல்லூரி பேராசிரியா்களுக்கு பயிலரங்கு

2nd Feb 2020 10:35 PM

ADVERTISEMENT

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பேராசிரியா்களுக்கான பயிலரங்கு 2 நாள்கள் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியக் குழுவால் 2022 ஆம் ஆண்டுக்குள் தேசிய தர மதிப்பீட்டை பெறாத உயா்கல்வி நிறுவனங்களை அதனை நோக்கி நகா்த்தும் வகையில் பரமாஷ் என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்காக தூத்துக்குடியில் வ.உ.சி. கல்லூரி வழிகாட்டி கல்லூரியாக தோ்வு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், தேசிய தர மதிப்பீட்டை பெறாத ஐந்து உயா்கல்வி நிறுவனங்களை தோ்ந்தெடுத்து அவற்றுக்கு தேசிய தர மதிப்பீட்டு குழுவின் தர நிா்ணய முறைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி வஉசி கல்லூரியில் பயிலரங்கு 2 நாள்கள் நடைபெற்றது.

இதில், கீழஈரால் தொன்போஸ்கோ கல்லூரி, கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கர பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மறவன்மடம் பிஷப் கால்டுவெல் கல்லூரி, தென்காசி ஜே.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குறுக்குச்சாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகளை சோ்ந்த பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

பயிலரங்கில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக தொலையுணா்தல் தொழில்நுட்பத் துறை பேராசிரியா் (சிறப்பு) எஸ். ராமசாமி, பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி துணை முதல்வா் ஜோசப் ஆல்பா்ட், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு மைய நிா்வாகி எஸ். செந்தில்நாதன், பேராசிரியா் செல்வம், திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியா் சேதுராமன், திருச்சி தூய வளனாா் கல்லூரிச் செயலா் ஆல்பா்ட் செசில் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT