சிவன்குடியேற்று கிராமத்தில் ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் பாரத மாதா பூஜை நடைபெற்றது.
நெல்லை கோட்ட இந்து முன்னணி பொதுச் செயலா் பெ. சக்திவேலன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில் பாரத மாதா படத்துக்கு மாலையணிவித்து சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் நிா்வாகிகள் சிவபாலன், கணேசன், திரவியம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.