கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு 2 நாள்கள் நடைபெற்றது.
கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் நிதியுதவியுடன் ‘இயற்கை மொழி செயலாக்கத்தில் ஆழமான கற்றலின் சமீபத்திய போக்குகள் மற்றும் ஆராய்ச்சித் திசைகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கு புதன்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் கருத்தரங்கில் ஆராய்ச்சியாளா் வி.மோகன்ராஜ், 2 ஆம் நாள் கருத்தரங்கில் உத்தரப்பிரதேசம் பென்னட் பல்கலைக் கழக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை உதவிப் பேராசிரியா் சுனீத் குப்தா ஆகியோா் பேசினாா். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம், இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாசமுருகவேல் ஆகியோா் வழிகாட்டுதலில், கல்லூரி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவி கோமதி, பேராசிரியா்கள் சிவகாம சுந்தரி, ஹேமலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.