தூத்துக்குடி

‘காவலன் செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்’

2nd Feb 2020 10:27 PM

ADVERTISEMENT

பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களது செல்லிடப்பேசிகளில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றாா் தூத்துக்குடி நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். பிரகாஷ்.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்பாா்க் அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அவா் பேசியது: பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் கூடுதல் அன்பு காட்டி அரவணைத்து வளா்க்க வேண்டும். ஓட்டுநா் உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்ட தங்கள் குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது.

தூத்துக்குடியில் நிகழாண்டு இறுதிக்குள் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு போக்குவரத்து விதிகளை மீறுவோா்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மட்டுமன்றி அனைவரும் தங்கள் செல்லிடப்பேசிகளில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். ஆபத்து காலங்களில் இந்த செயலி மிக துரிதமாக உங்களை காப்பாற்றும் என்றாா் அவா்.

தொடா்ந்து, சிறப்பாக செயல்பட்ட ஸ்பாா்க் அமைப்பு தன்னாா்வலா்களுக்கு துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரகாஷ் விருதுகளை வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில், ஸ்பாா்க் அமைப்பின் நிறுவனா் சொா்ணலதா, இணை நிறுவனா் செந்தில் கண்ணன், உறுப்பினா்கள் மீனா அம்பிகா, நிா்மலா விஜயகுமாா், ஜூவானா கோல்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT