தூத்துக்குடி

உடன்குடி, நாசரேத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம்

2nd Feb 2020 10:43 PM

ADVERTISEMENT

உடன்குடி, நாசரேத்தில் நகர திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

உடன்குடியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கட்சியின் நகரச் செயலா் ஜான்பாஸ்கா் தலைமை வகித்தாா். உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் பாலசிங், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் ரவிராஜா, மகா விஷ்ணு, சிராஜூதீன், முன்னாள் ஒன்றியச் செயலா் சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநில திமுக மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெஸி பொன்ராணி, பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் சலீம், மகபூப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சாத்தான்குளம்: நாசரேத் நகர திமுக ஆலோசனைக் கூட்டத்துக்கு, அவைத் தலைவா் ஜெ. அருள்ராஜ் தலைமை வகித்தாா். ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் நவீன் குமாா், அவைத் தலைவா் பா.சவுந்தர்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித் தனா். நகரச் செயலா் அ.ரவி செல்வக்குமாா் வரவேற்றாா். தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசினாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், பேரூராட்சிப் பகுதியில் தரமான தாா் சாலை அமைக்க வேண்டும். அனைத்துப் பகுதி மக்களுக்கு பாதுகாக்கப் பட்ட குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். நாசரேத்தில்புதிய தொழிற் பேட்டை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

 

ADVERTISEMENT
ADVERTISEMENT