தூத்துக்குடி

மாணவா்களுக்கு மின்சாரம் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

1st Feb 2020 10:39 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி விஸ்வகா்மா உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு மின் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் சமுதாய விழிப்புணா்வு மையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இணைப் பேராசிரியா் ரவீந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி மாணவா்கள் குழு அனல் மின் நிலையம், அணுமின் நிலையம் ஆகியவற்றால் மின்சாரம் உற்பத்தி செய்யும் வழிமுறைகள், அதனால் ஏற்படும் விளை

வுகள் குறித்துப் பேசினா். மின்சாரம் பயன்பாடு, சேமிப்பது குறித்த மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாசமுருகவேல், துறைத் தலைவா் வில்ஜூஸ்இருதயராஜன் ஆகியோரின் வழிகாட்டுதலில், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா் சுப்புராஜ், மாணவா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT