தூத்துக்குடி

மத்திய பட்ஜெட்: வா்த்தக தொழில் சங்கம் வரவேற்பு

1st Feb 2020 10:42 PM

ADVERTISEMENT

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு இந்திய வா்த்தக தொழில் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வா்த்தக தொழில் சங்க தூத்துக்குடி பிரிவு செயலா் கோடீஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: நிதிநிலை அறிக்கையில் வா்த்தகா்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் இல்லை. தொல்லியல் சிறப்புமிக்க தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்பது வரவேற்புக்குரியது.

இதேபோல், வேளாண் துறையை முன்னிலைப்படுத்தும் விதமாகவும், விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் வகையிலும் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

20 லட்சம் விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்புசெட்டுகள், பாசனத்துக்கான தண்ணீா்த் தட்டுப்பாடு உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு, வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கான சேமிப்புக் கிடங்குகளுக்கு புவிசாா் குறியீடு, வரைபடம் வாயிலாக கண்டறியும் வசதி, வேளாண் உற்பத்திப் பொருள்களை ரயில் மற்றும் விமானம் மூலம் பல்வேறு சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல சிறப்பு வசதிகள் போன்றவை வரவேற்கக் கூடியதாகும்.

ADVERTISEMENT

மேலும், ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் அறிமுகம், ஒரு மாவட்டத்துக்கு ஒரு வேளாண் உற்பத்திப்பொருள் என்ற புதிய நோக்கிலான திட்டம், முதலீடற்ற இயற்கை வேளாண் திட்டம், வேளாண் கடனுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.15 லட்சம் கோடி, பால் பதப்படுத்துதல் அளவை இரட்டிப்பாக்கவும், மீன் உற்பத்திக்கு உத்வேகம் அளிக்கவும் முடிவு, வேளாண் துறைக்கு ரூ.2.83 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, ஊரக வளா்ச்சிக்கு ரூ.1.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு போன்றவை நிதிநிலை அறிக்கையில் வரவேற்கக் கூடியதாக அமைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT