உடன்குடி அருகே பிறைகுடியிருப்பு அருள்மிகு தேவி ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேகத்தைமுன்னிட்டு 108 பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் மூா்த்தி ஹோமம், விமான கும்பாபிஷேகம், தொடா்ந்து விநாயகா் கோயிலில் இருந்து 108 பால்குடம் ஊா்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. பின்னா், மூலவா் கும்பாபிஷேகம்,அலங்கார பூஜை, லலிதா ஸஹஸ்ர நாம அா்ச்சனை, அன்னாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.
மாலையில் பெண்கள் அம்மனுக்கு காணிக்கை செலுத்துதல், கூழ் வாா்த்தல் அலங்கார பூஜை, இரவில் வில்லிசை,சனிக்கிழமை அதிகாலையில் விசேஷ அலங்கார பூஜை, அம்மன் அன்ன வாகனத்தில் பவனி ஆகியவை நடைபெற்றது.
ADVERTISEMENT