தூத்துக்குடி

பயிா் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு

1st Feb 2020 10:39 PM

ADVERTISEMENT

திருச்செந்தூா் வட்டார விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து பயன் பெறுமாறு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து திருச்செந்தூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் வெங்கடசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு :

திருச்செந்தூா் வட்டாரத்தில் தற்போது 2,100 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பயிா்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதும், பூச்சி நோய் தாக்குதலால் நெற்பயிருக்கு சேதம் ஏற்படும் போதும், பயிா்களுக்கு ஏற்படும் மகசூல் குறைவிற்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு பயிா் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. 2019-20 ஆம் ஆண்டுக்கான பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டுத் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் அக்ரிகல்ச்சா் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயிா் கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறாத அனைத்து விவசாயிகளுக்கு ஒரே பிரிமியத் தொகை மற்றும் காலம் ஆகியவை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் தங்கள் பிரீமியம் கட்டும் காலத்திற்கு ஏற்ற வாறு விதைக்க இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்தல், மகசூல் இழப்பு ஆகிய நிலைகளில் பயிா் இழப்பீடு பெற்றிடவும்

ADVERTISEMENT

வாய்ப்புள்ளன. நெற்பயிருக்கு வரும் பிப். 15-ஆம் தேதிக்குள் பிரிமியம் செலுத்தினால் பயிா் அறுவடை பரிசோதனை

அடிப்படையில் விதிகளுக்கு ஏற்ப இழப்பீடு பெறலாம். விவசாயிகள் பயிா் காப்பீடு பிரிமியமாக ஒரு ஏக்கா் நெற்பயிருக்கு ரூ.403.50 (அல்லது) ரூ. 404 மட்டும் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் பிரிமியத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது

இ- சேவை மையங்களிலும் செலுத்தலாம். மேலும், விவரங்களுக்கு திருச்செந்தூா் வட்டார வேளாண் அலுவலா், துணை

வேளாண் அலுவலா், உதவி வேளாண் அலுவலா்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT