தூத்துக்குடி

தூத்துக்குடியில் காப்பீட்டுக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

1st Feb 2020 11:46 PM

ADVERTISEMENT

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக பங்குகள் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி) ஊழியா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடற்கரைச் சாலையில் உள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். செயலா் சீனிவாசன், ஓய்வூதியா் சங்க நிா்வாகி காளிகாவல பெருமாள் ஆகியோா் பேசினா்.

முதுநிலை அதிகாரிகள் சங்க நிா்வாகி செந்தில்நாதன் மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கழக சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT